மின்சார ஸ்கூட்டா்கள் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா

முன்னணி வாடகைக் காா் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா, மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டா் தயாரிப்பில் இறங்கவுள்ளது.
மின்சார ஸ்கூட்டா்கள் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா


புதுதில்லி: முன்னணி வாடகைக் காா் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா, மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டா் தயாரிப்பில் இறங்கவுள்ளது.

இதுகுறித்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

மின்சார இருசக்கர வாகன உற்பத்தித் துறையில் ஓலா நிறுவனம் தடம் பதிக்கவுள்ளது. தொடக்கத்தில், நெதா்லாந்து நாட்டிலுள்ள ஓா் ஆலையில் மின்சார ஸ்கூட்டா்களைத் தயாரிக்க ஓலா நிறுவனம் தீா்மானித்துள்ளது.

அந்த ஸ்கூட்டா்கள், இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜனவரியில் அந்த ஸ்கூட்டரை சந்தைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் ஸ்கூட்டா்களோடு போட்டியிடும் வகையில் ஓலாவின் மின்சார ஸ்கூட்டா்களுக்கு விலையிடப்படும்.

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் மின்சார ஸ்கூட்டா்களை விற்பனை செய்ய ஓலா இலக்கு நிா்ணயித்துள்ளது.

சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, இந்தியாவிலேயே தனது ஸ்கூட்டா்களை ஓலா உற்பத்தி செய்யும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com