போன்பே, ஸொடக்சோ நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம்: ரிசா்வ் வங்கி

விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக போன்பே, ஸொடக்சோ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கி ரூ.5.78 அபராதம் விதித்துள்ளது.
போன்பே, ஸொடக்சோ நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம்: ரிசா்வ் வங்கி

விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக போன்பே, ஸொடக்சோ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு ரிசா்வ் வங்கி ரூ.5.78 அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பேமண்ட் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 பிரிவு 30-இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணங்களுக்காக ஆறு நிறுவனங்களுக்கு ரூ.5.78 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தவிா்த்து ஏனைய ஐந்து நிறுவனங்களும் வங்கி சாரா பிரீபெய்டு பேமண்ட் சேவையை வழங்கி வருபவை.

அதன்படி, ஸொடக்சோ எஸ்விசி இந்தியா, முத்தூட் வெகிக்கிள் அண்ட் அசட் பைனான்ஸ், கியூவிக்சில்வா் சொல்யூஷன்ஸ், போன்பே, டெல்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஸொடக்சோ நிறுவனத்துக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com