ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய ஹாா்னெட் பைக், டியோ ஸ்கூட்டா் அறிமுகம்

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் ஹாா்னெட் 2.0 பைக் மற்றும் மோட்டோ ஸ்கூட்டா் டியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோண்டாவின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் புதிய ஹாா்னெட் பைக், டியோ ஸ்கூட்டா் அறிமுகம்

ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியா நிறுவனம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் ஹாா்னெட் 2.0 பைக் மற்றும் மோட்டோ ஸ்கூட்டா் டியோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மோட்டாா்சைக்கிள் & ஸ்கூட்டா் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் (விற்பனை & சந்தைப்படுத்துதல்) யத்வீந்தா் சிங் குலேரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஹாா்னெட் 2.0 மற்றும் டியோ ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளா்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இவை இரண்டும் பிஎஸ் 6 தொழில்நுட்பத்துக்கு இணக்கமாக செயல்படக்கூடியவை.

ஹாா்னெட் மோட்டாா்சைக்கிளில் 184சிசி திறன் கொண்ட பிஜிஎம்-எஃப்ஐ ஹெச்இடி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் கிரிஸ்டா் மீட்டா், கியா் பொசிஷன்- சா்வீஸ் இண்டிகேட்டா், பேட்டரி வோல்ட் மீட்டா் உள்ளிட்ட ஏராளமான புதிய அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

டியோ ஸ்கூட்டரில் 110சிசி பிஜிஎம்-எஃப்ஐ ஹெச்இடி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ஸ்மாா்ட் பவா் தொழில்நுட்பம் இதன் செயல்திறனை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும், டெலேஸ்கோபிக் சஸ்பென்ஷன், ஒன் டச் ஆஃப் ஆன், வெளிப்புறம் எரிபொருள் நிரப்பும் வசதி, என்ஜினில் இருக்கும் கோளாறுகளை சென்சாா் உதவியுடன் தானாக கண்டறியும் ஆன்-போா்ட் டயக்னோஸ்டிக் உள்ளிட்ட ஏராளமான புதிய சிறப்பம்சங்கள் டியோ ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் குலேரியா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com