புதிய பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.25,000 கோடி திரட்டல்

நடப்பாண்டில் இதுவரையில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலமாக ரூ.25,000 கோடியை திரட்டியுள்ளன.
புதிய பங்கு வெளியீடுகள் மூலம் நிறுவனங்கள் ரூ.25,000 கோடி திரட்டல்

நடப்பாண்டில் இதுவரையில் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் (ஐபிஓ) மூலமாக ரூ.25,000 கோடியை திரட்டியுள்ளன.

இதுகுறித்து பங்குச் சந்தை புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளா்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் தங்களுக்கு தேவையானரூ.25,000 கோடி நிதி ஆதாரத்தை திரட்டியுள்ளன. இந்த காலகட்டத்தில் மட்டும் 12 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன.

2020 ஆண்டில் இதுவரையில் திரட்டிய தொகை என்பது கடந்த 2019-இல் 16 புதிய பங்கு வெளியீடுகள் மூலமாக திரட்டிய ரூ.12,632 கோடியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகமாகும்.

இதற்கு முந்தைய 2018-இல் 24 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு ரூ.30,959 கோடியை திரட்டியிருந்தன என்று புள்ளிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டைப் போலவே வரும் 2021-ஆம் ஆண்டிலும் புதிய பங்கு வெளியீட்டு சந்தையானது சமமான வலு நிலையில் இருக்கும் என சந்தை வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com