தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 9-ஆவது நாளாக ஏற்றம்! ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது.
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 9-ஆவது நாளாக ஏற்றம்! ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும், இறுதியில் நேர்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 31.71 புள்ளிகள் உயர்ந்து 40,625.51}இல் நிலைபெற்றது.  பங்குச் சந்தை தொடர்ந்து 9}ஆவது நாளாக ஏற்றம் பெற்றுள்ளது.
பங்குச் சந்தையில் நிகழ்ந்து வரும் சமீபத்திய மீட்சி அரசிடமிருந்து நிதி தொகுப்பு எதிர்பார்ப்பால் வழிநடத்தப்பட்டது. ஆனால், நிதியமைச்சரின் திங்கள்கிழமை அறிவிப்பு முதலீட்டாளர்களின் உணர்வை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டது. இதனால், சந்தை தள்ளாட்டத்தில் இருந்தது.  இந்நிலையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஐடி பங்குகளுக்கு அமோக ஆதரவு இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
1,486 பங்குகள் வீழ்ச்சி:  மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,814 பங்குகளில் 1,147 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,486 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 181 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு  ரூ.5 ஆயிரம் கோடி குறைந்து ரூ.160.36 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.29 சதவீதமும், ஸ்மால் குறியீடு 0.12 சதவீதமும் குறைந்தன.
9}ஆவது நாளாக ஏறுமுகம்:  சென்செக்ஸ் தொடர்ந்து 9}ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. சென்செக்ஸ் காலையில் பெரியளவில் மாற்றமின்றி 40,592.54}இல் தொடங்கி அதிகபட்சமாக 40,786.82 வரை உயர்ந்தது. பின்னர்,  40,461.97 வரை கீழே சென்றது. இறுதியில் 31.71 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்ந்து 40,625.51}இல் நிலைபெற்றது. 
ஹெச்சிஎல் டெக்  முன்னேற்றம்:  சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஹெச்சிஎல் டெக்  3.94 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க்,  இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மகேந்திரா ஆகியவை 1.25 முதல் 2.40 சதவீதம் வரை உயர்ந்தன.
டைட்டன் சரிவு: அதே சமயம்,  டைட்டன்  2.18 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், சன்பார்மா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ, மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்லே இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில்...:  தேசிய பங்குச் சந்தையில் 665 பங்குகள்  ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 954 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 3.55  புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து  11,934.50}இல் நிலைபெற்றது. 
நிஃப்டி  ஐடி குறியீடு 1.31 சதவீதம், மெட்டல் குறியீடு 0.39 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் பார்மா, மீடியா, பேங்க், பைனான்சியல் சர்வீஸஸ் ஆகிய குறியீடுகள் 1 சதவீதம் முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com