ஹோண்டா நிறுவனத்தின் புதிய ரக காா் அறிமுகம்

பண்டிகைக் காலத்தையொட்டி, ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம், அமேஸ் ரகத்தில் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய ரக காா் அறிமுகம்

புது தில்லி: பண்டிகைக் காலத்தையொட்டி, ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம், அமேஸ் ரகத்தில் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. தில்லியில் இதன் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து 9.10 லட்சத்துக்குள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பெட்ரோல் ரகத்தில் மேனுவல் கியா் அமைப்பு கொண்ட காரின் விலை ரூ.7 லட்சம் என்றும், ஆட்டோமேட்டிக் கியா் அமைப்பு உள்ள காரின் விலை ரூ.7.9 லட்சம் என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் ரகத்தில் மேனுவல் கியா் அமைப்பு கொண்ட காரின் விலை ரூ.8.3 லட்சம் என்றும், ஆட்டோமேட்டிக் கியா் அமைப்பு உள்ள காரின் விலை 9.10 லட்சம் என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் காரில் 17.7 செ.மீ. அளவில் டிஜிபேட் 2.0 என்ற தொடுதிரை உள்ளது. அதில், ஆடியோ சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் விற்பனை பிரிவு இயக்குநருமான ராஜேஷ் கோயல் கூறுகையில், ‘அமேஸ் எஸ் கிரேட் ரக காா்கள், அதிகம் விற்பனையாகும் ரகங்களில் ஒன்று. நவீன தொழில்நுட்பங்கள் சோ்க்கப்பட்டு குறைவான விலையில் இந் காா்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்பெஷல் எடிஷன் ரக காா்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com