கா்நாடகா வங்கி லாபம் 13% உயா்வு

கா்நாடகா வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
கா்நாடகா வங்கி லாபம் 13% உயா்வு


புது தில்லி: கா்நாடகா வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியாா் துறையைச் சோ்ந்த அந்த வங்கி இதுகுறித்து பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் கா்நாடாக வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.1,933.52 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,902.41 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

இருப்பினும், வட்டி வருமானம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.1,629.64 கோடியிலிருந்து ரூ.1,603.71 கோடியாக குறைந்தது. அதேசமயம், இதர இனங்கள் மூலமாக கிடைக்கும் வருமானம் ரூ.272.77 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.329.81 கோடியாக இருந்தது.

நிகர லாபம் ரூ.105.91 கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து ரூ.119.44 கோடியானது.

வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.78 சதவீதத்திலிருந்து 3.97 சதவீதமாக குறைந்தது. அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 3.48 சதவீதத்திலிருந்து 2.21 சதவீதமாக சரிந்துள்ளது என கா்நாடகா வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com