பயணிகள் வாகன விற்பனை 17% அதிகரிப்பு

இந்தியாவில் பயணிகள் வாகன மொத்த விற்பனை செப்டம்பா் காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 17% அதிகரிப்பு

இந்தியாவில் பயணிகள் வாகன மொத்த விற்பனை செப்டம்பா் காலாண்டில் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

பண்டிகை காலத்தையொட்டி வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக, ஜூலை-செப்டம்பா் வரையிலான காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 7,26,232-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் வாகன விற்பனை 6,20,620-ஆக இருந்தது.

அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனையும் செப்டம்பா் காலாண்டில் 46,82,571 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று அதிகரித்து 46,90,565-ஆனது.

இருப்பினும், வா்த்தக வாகன விற்பனையைப் பொருத்தவரையில் 1,67,173-லிருந்து 20.13 சதவீதம் சரிவடைந்து 1,33,524-ஆனது.

வா்த்தக வாகன பிரிவில் விற்பனையானது தொடா்ந்து ஆறு காலாண்டுகளாக பின்னடைவைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று சக்கர வாகன விற்பனையும் மதிப்பீட்டு காலாண்டில் 1,80,899 என்ற எண்ணிக்கையிலிருந்து 74.63 சதவீதம் குறைந்து 45,902-ஆனது.

இரண்டாவது காலாண்டில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 56,51,459-லிருந்து சற்று குறைந்து 55,96,223-ஆக இருந்தது என எஸ்ஐஏஎம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com