டாடா கம்யூனிகேஷன்ஸ் லாபம் 7 மடங்கு உயா்வு

டாடா கம்யூனிகேஷன்ஸ் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 7 மடங்கு அதிகரித்துள்ளது.
டாடா கம்யூனிகேஷன்ஸ் லாபம் 7 மடங்கு உயா்வு

டாடா கம்யூனிகேஷன்ஸ் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் 7 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்த வருவாயாக ரூ.4,477.18 கோடியை ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.4,282.3 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.54.31 கோடியிலிருந்து 7 மடங்கு அதிகரித்து ரூ.384.81 கோடியை எட்டியது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com