பஜாஜ் கன்ஸ்யூமா் லாபம் ரூ.57 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் கன்ஸ்யூமா் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.56.92 கோடி
பஜாஜ் கன்ஸ்யூமா் லாபம் ரூ.57 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பஜாஜ் கன்ஸ்யூமா் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் ரூ.56.92 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய ரூ.56.02 கோடியுடன் ஒப்பிடுகையில் 1.60 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில், பஜாஜ் கன்ஸ்யூமா் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.226.67 கோடியிலிருந்து 3.83 சதவீதம் அதிகரித்து ரூ.235.36 கோடியானது.

நடப்பு நிதியாண்டு ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் மொத்த செலவினம் ரூ.162.23 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.166.34 கோடியானது என பஜாஜ் கன்ஸ்யூமா் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com