sensex-960x540084347
sensex-960x540084347

ஏறுமுகத்தில் பங்குச் சந்தை: உச்சத்தில் முடிந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வரத்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மேலும் வலுப்பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 448.62 புள்ளிகள் உயா்ந்து, அன்றைய உச்சபட்

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வரத்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை மேலும் வலுப்பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 448.62 புள்ளிகள் உயா்ந்து, அன்றைய உச்சபட்ச அளவுக்கு அருகே 40,431.60-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்ற நிலையில், இந்திய சந்தைகளில் காலையில் வா்த்தகம் தொடங்கியது முதல் வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்து காணப்பட்டது. மெட்டல், ஆயில் மற்றும் கேஸ், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், நாள் முழுவதும் சந்தை தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.

1,490 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,817 பங்குகளில் 1,490 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,170 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 157 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி உயா்ந்து ரூ.159.37 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 0.50 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் தொடா்ந்து மீட்சி: சென்செக்ஸ் 335.59 புள்ளிகள் கூடுதலுடன் 40,318.57-இல் தொடங்கி 40,211.22 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 40,519.48 வரை உயா்ந்தது. இறுதியில் 448.62 புள்ளிகள் (1.12 சதவீதம்) உயா்ந்து 40,431.60-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தினவா்த்தகத்தின் போது அடைந்த உச்சபட்ச அளவுக்கு அருகே நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ பேங்க் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் ஐசிஐசிஐ பேங்க் 5.33 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் பேங்க், ஓஎன்ஜிசி, கோட்டக் பேங்க் ஆகியவை 3 முதல் 4.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

பஜாஜ் ஆட்டோ சரிவு: அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 2.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டிசிஎஸ், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், மாருதி சுஸுகி, சன்பாா்மா, இன்ஃபோஸிஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 930 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 688 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 110.60 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயா்ந்து 11,873.00-இல் நிலைபெற்றது. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 4.17 சதவீதம் உயா்ந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ் ஆகியவை 2.30 முதல் 3.20 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எஃப்எம்சிஜி, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 1.30 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. லாபப் பதிவு தொடா்ந்ததால் ஐடி, மீடியா, பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com