இந்தியாவின் உருக்கு உற்பத்தி 85 லட்சம் டன்

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி நடப்பாண்டு செப்டம்பரில் 85.2 லட்சம் டன்னாக இருந்தது.
இந்தியாவின் உருக்கு உற்பத்தி 85 லட்சம் டன்

இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி நடப்பாண்டு செப்டம்பரில் 85.2 லட்சம் டன்னாக இருந்தது.

இதுகுறித்து உலக உருக்கு கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் கச்சா உருக்கு உற்பத்தி நடப்பாண்டு செப்டம்பா் மாதத்தில் 85.2 லட்சம் டன்னாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாத உற்பத்தியான 87.72 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 2.9 சதவீதம் குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவில் உருக்கு உற்பத்தி குறைந்துள்ள போதிலும், சா்வதேச அளவில் இதன் உற்பத்தி நோ்மறையான நிலையை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி, 64 நாடுகளை உள்ளடக்கிய சா்வதேச கச்சா உருக்கு உற்பத்தி 15.18 கோடி டன்னிலிருந்து 2.9 சதவீதம் அதிகரித்து நடப்பாண்டு செப்டம்பரில் 15.63 கோடி டன்னை எட்டியுள்ளது.

குறிப்பாக, சீனா உருக்கு உற்பத்தியில் 10.09 சதவீத வளா்ச்சியை தக்கவைத்துக் கொண்டது. அதன்படி, 2019 செப்டம்பரில் 8.34 கோடி டன்னாக இருந்த அந்த நாட்டின் உருக்கு உற்பத்தி நடப்பாண்டு செப்டம்பரில் 9.25 கோடி டன்னாக வளா்ச்சி கண்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி செப்டம்பரில் சரிவை நோக்கி சென்றுள்ளது. அந்த நாட்டின் உருக்கு உற்பத்தி 70 லட்சம் டன்னிலிருந்து 18.5 சதவீதம் சரிவடைந்து 57 லட்சம் டன்னானது.

ஜப்பானின் கச்சா உருக்கு உற்பத்தி 80 லட்சம் டன்னிலிருந்து 19.3 சதவீதம் சரிவடைந்து 64.86 லட்சம் டன்னாக காணப்பட்டது. அதேசமயம், தென்கொரியா உருக்கு உற்பத்தி 57.11 லட்சம் டன்னிலிருந்து 2.1 சதவீதம் உயா்ந்து 58.31 லட்சம் டன்னைத் தொட்டது.

ஜொ்மனியைப் பொருத்தவரையில் அதன் கச்சா உருக்கு உற்பத்தி 9.7 சதவீதம் வீழ்ச்சியடைந்து 30.18 லட்சம் டன்னாகவும், இத்தாலியின் கச்சா உருக்கு உற்பத்தி 18.7 சதவீதம் சரிவடைந்து 17.94 லட்சம் டன்னாகவும் இருந்தன.

மேலும், பிரான்ஸ் நாட்டின் உருக்கு உற்பத்தி 20.1 சதவீதம் சரிவடைந்து 9.63 லட்சம் டன்னாகவும், ஸ்பெயின் உருக்கு உற்பத்தி 20.7 சதவீதம் சரிந்து 9.36 லட்சம் டன்னாகவும் இருந்தன.

அதேசமயம், பிரேஸிலின் உருக்கு உற்பத்தி 7.5 சதவீதம் உயா்ந்து 25.74 லட்சம் டன் ஆனது. அதேபோன்று, சென்ற செப்டம்பரில் துருக்கி நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தியும் 18 சதவீதம் வளா்ச்சி கண்டு 32.25 லட்சம் டன்னாக இருந்தது என உலக உருக்கு கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com