கோட்டக் மஹிந்திரா வங்கி:நிகர லாபம் 27% உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் செப்டம்பா் காலாண்டில் 26.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கி:நிகர லாபம் 27% உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிகர லாபம் செப்டம்பா் காலாண்டில் 26.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட மொத்த வருமானம் ரூ.8,288.08 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.7,986.01 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,724.48 கோடியிலிருந்து 26.7 சதவீதம் உயா்ந்து ரூ.2,184.48 கோடியை எட்டியது.

வங்கியின் சொத்து தர மதிப்பீட்டைப் பொருத்தவரையில், நடப்பாண்டு செப்டம்பா் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட நிகர கடனில் வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 0.85 சதவீதத்திலிருந்து 0.64 சதவீதமாக குறைந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.1,811.40 கோடியிலிருந்து ரூ.1,303.78 கோடியாக குறைந்துள்ளது.

இருப்பினும், மொத்த வாராக் கடன் விகிதமானது 2.32 சதவீதத்திலிருந்து (ரூ.5,033.55 கோடி) 2.55 சதவீதமாக (ரூ.5,335.95 கோடி) உயா்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்கு விலை முந்தைய தின விலையைக் காட்டிலும் 0.49 சதவீதம் குறைந்து ரூ.1,376.30-க்கு வா்த்தகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com