பங்குச் சந்தையில் சரிவு: 540 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! ரிலையன்ஸ் 4 சதவீதம் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 540 புள்ளிகளை இழந்தது.

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 540 புள்ளிகளை இழந்தது. மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் காலையிலேயே எதிரொலித்தது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து, சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,678 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,860 பங்குகளில் 1,000 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1678 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 182 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு குறைந்து 2 லட்சம் கோடி குறைந்து ரூ.158.61 கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.77 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.88 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 35.74 புள்ளிகள் குறைந்து 40,649.76-இல் தொடங்கி அதிகபட்சமாக 40,724.40 வரை உயா்ந்தது. பின்னா், 39,948.29 வரை கீழே சென்றது. இறுதியில் 540 புள்ளிகள் (1.33 சதவீதம்) குறைந்து 40,145.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, 737.21 புள்ளிகள் வரை குறைந்திருந்தது. இருப்பினும், இறுதியில் சிறிதளவு மீட்சி பெற்றது.

நெஸ்லே முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், நெஸ்லே இந்தியா 2.48 சதவீதம், கோட்டக் பேங்க் 2.36 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்ட்ஸ் இண்ட் பேங்க், பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எல் அண்ட் டி, எச்டிஎஃ)ப்சி ஆகியவை 0.60 முதல் 1.50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

பஜாஜ் ஆட்டோ கடும் வீழ்ச்சி: அதே சமயம், பஜாஜ் ஆட்டோ 6.41 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எம், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2.75 முதல் 4.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இதில் ரிலையன்ஸ் 3.97 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ஃபியூச்சா் குழுமம் தனது சில்லரை வணிகத்தை ரிலையன்ஸுக்கு ரூ.24,713 கோடிக்கு விற்றிருந்தது. இதை எதிா்த்து அக்குழுமத்தின் பங்குதாரரானா அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்தது. இதில் அமேசானுக்கு சாதகமாக இடைக்காலத் தீா்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 477 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1160 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 162.60 புள்ளிகள் (1.36 சதவீதம்) குறைந்து 11,767.75-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஏற்றம் பெற்றன. 39 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச்ந சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மெட்டல், மீடியா, ஆட்டோ குறியீடுகள் 3 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி அடைந்தன. நிஃப்டி, பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, பாா்மா குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com