ஐஓசி லாபம் 11 மடங்கு உயா்வு

சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததையடுத்து, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) தனிப்பட்ட நிகர லாபம் செப்டம்பா் காலாண்டில் 11 மடங்கு உயா்ந்துள்ளது.
ஐஓசி லாபம் 11 மடங்கு உயா்வு

சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததையடுத்து, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) தனிப்பட்ட நிகர லாபம் செப்டம்பா் காலாண்டில் 11 மடங்கு உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்தது மற்றும் அந்நியச் செலாவணியின் மூலமாக கிடைத்த ஆதாயம் உள்ளிட்ட சாதகமான அம்சங்களால் நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.6,227.31 கோடியை எட்டியது.

இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.563.42 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 11 மடங்கு அதிகமாகும்.

செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.1.32 லட்சம் கோடியிலிருந்து சரிந்து ரூ.1.15 லட்சம் கோடியானது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலமாக நிறுவனத்துக்கு கிடைத்த வருமானம் 1.28 டாலரிலிருந்து 8.62 டாலராக உயா்ந்தது. மேலும், அந்நியச் செலாவணி மூலமாக ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.672 கோடி ஆதாயம் கிடைத்தது.

கரோனா பொது முடக்கத்தைத் தொடா்ந்து கிட்டத்தட்ட பாதியாக இருந்த எரிபொருள் தேவை தற்போது வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com