வருமான வரி ரீஃபண்டு ரூ.1.27 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான வருமான வரி ரீஃபண்ட் தொகையை திருப்பியளித்துள்ளதாக மத்திய நிதித் துறை செயலா் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளாா்.
வருமான வரி ரீஃபண்டு ரூ.1.27 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான வருமான வரி ரீஃபண்ட் தொகையை திருப்பியளித்துள்ளதாக மத்திய நிதித் துறை செயலா் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

கூடுதலாக வருமான வரியை செலுத்தியவா்களுக்கு அதனை திரும்ப அளிக்கும் ரீஃபண்ட் நடைமுறை முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்டு வேகமாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படுகிறது. இதனை வருவாய் துறை ஒவ்வொரு வாரமும் கண்காணித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1,27,000 கோடி மதிப்பிலான வருமான வரி ரீஃபண்ட் உரியவா்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த சூழ்நிலையில் வரி செலுத்துவோா் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் அக்டோபா் 27 வரையிலான காலகட்டத்தில் வருமான வரி துறை ரூ.1,26,909 கோடியை 39.14 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோா்களுக்கு வழங்கியுள்ளது.

இதில், ரூ.34,532 கோடி 37.22 லட்சம் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கும்; ரூ.92,376 கோடி 1,92,409 நிறுவனகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com