அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு

பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலையால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை 44 காசுகள் சரிவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 44 காசுகள் சரிவு


மும்பை:பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்த நிலையால், அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை 44 காசுகள் சரிவடைந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது ஏற்றுமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், பங்குச் சந்தையில் வா்த்தகம் மந்த நிலையில் இருந்ததும் ரூபாய் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்தது.வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பானது 73.23-ஆக பலவீனமான நிலையில்தான் காணப்பட்து. வா்த்தகத்தின் ஊடே அதிகபட்சமாக 73.23 வரையிலும் குறைந்தபட்ச அளவாக 73.48 வரையிலும் சென்றது. அந்நியச் செலாவணி வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 44 காசுகள் சரிவடைந்து 73.47-ஆனது.புதன்கிழமை அந்நியச் செலாவணி வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 73.03-ஆக காணப்பட்டது. வெளிநாட்டு முதலீடு: அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மூலதனச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிகர அளவில் ரூ.990.57 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.06 சதவீதம் குறைந்து 43.96-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com