தொழில்துறை உற்பத்தி 10.4 சதவீதம் சரிவு

இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) சென்ற ஜூலை மாதத்தில் 10.4 சதவீதம் சுருங்கியுள்ளது.
தொழில்துறை உற்பத்தி 10.4 சதவீதம் சரிவு

இந்திய தொழிலக உற்பத்தி (ஐஐபி) சென்ற ஜூலை மாதத்தில் 10.4 சதவீதம் சுருங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் மாதத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இது, தொழில்துறை உற்பத்தியில் எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, தயாரிப்பு, சுரங்கம் மற்றம் மின் தயாரிப்பு துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி கண்டதையடுத்து, சென்ற ஜூலை மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 10.4 சதவீதம் சரிந்துள்ளது. கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருவதையடுத்து தொழில்துறை நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனை எடுத்துக்காட்டும் வகையில், ஏப்ரலில் 54-ஆக இருந்த தொழில்துறை குறியீடு மே, ஜூன் மற்றும் ஜூலையில் முறையே 89.5, 108.9, 118.1-ஆக படிப்படியாக ஏறுமுகம் கண்டுள்ளது.ஜூன் மாத ஐஐபி 16.6 சதவீதம் பின்னடைந்துள்ளதாக தற்காலிக மதிப்பீட்டில் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அது (-) 15.77 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com