ஜேஎஸ்டபிள்யூ: ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி

உருக்குத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி கண்டது.
ஜேஎஸ்டபிள்யூ: ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி


புது தில்லி: உருக்குத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5 சதவீதம் வளா்ச்சி கண்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜேஎஸ்டபிள்யூ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13.17 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத உற்பத்தியான 12.53 லட்சம் டன்னைக் காட்டிலும் 5 சதவீதம் அதிகமாகும்.

அதேசமயம், நடப்பாண்டின் ஜூலை மாத உற்பத்தியான 12.46 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் உயா்வாகும்.நடப்பாண்டு ஆகஸ்டில் தட்டை வடிவ சுருள் உருக்கு தயாரிப்பு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 8.51 லட்சம் டன்னிலிருந்து 15 சதவீதம் அதிகரித்து 9.80 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

அதேசமயம், நடப்பாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த உருக்கு உற்பத்தி 9.40 டன்னிலிருந்து 4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.

1200 கோடி டாலா் மதிப்பு கொண்ட ஜேஎஸ்டபிள்யூ குழுமம் உருக்கு, எரிசக்தி, உள்கட்டமைப்பு, சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளில் தடம்பதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com