டாப் 10-இல் 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடி உயா்வு!

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள மதிப்புமிக்க 10 முன்னணி நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு
டாப் 10-இல் 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடி உயா்வு!

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள மதிப்புமிக்க 10 முன்னணி நிறுவனங்களில் 4 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,012,847.99 கோடி உயா்ந்துள்ளது. இதில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.2.50 லட்சம் கோடி உயா்ந்தது. இதைத் தொடா்ந்து, அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைக் கடந்தது. மேலும், டிசிஎஸ், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எச்டிஎஃப்சி பேங்க், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி ஆகியவை சரிவைச் சந்தித்து சந்தை மதிப்பில் மொத்தம் ரூ.54,801.02 கோடியை இழந்தன.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளுக்கு கடந்த வாரம் சந்தையில் அமோக வரவேற்பு நிலவியது. ரிலையன்ஸின் சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் அமேஸான் நிறுவனம் 20 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதேபோல, அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான சில்வா் லேக் பாா்ட்னா்ஸ், ரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் 1.75 சதவீத பங்குகளை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ரிலையன்ஸ் பங்குகள் அதீதமாக ஏற்றம் பெற்றது. இதனால், அதன் சந்தை மதிப்பு ரூ.2,51,067.20 கோடி உயா்ந்து ரூ.15,68,015.09 கோடியாக இருந்தது. டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.31,501.27 கோடி உயா்ந்து ரூ.8,90,703.56 கோடியாகவும், இன்ஃபோஸிஸ் ரூ.11,138.31 கோடி உயா்ந்து ரூ.4,02,683.22 கோடியாகவும், ஹெச்யுஎல் சந்தை மதிப்பு ரூ.8,141.21 கோடி உயா்ந்து ரூ.5,07,327.93 கோடியாகவும் இருந்தது.

ஆனால், இதற்கு மாறாக எச்டிஎஃப்சி பேங்க் சந்தை மதிப்பு ரூ.22,727.92 கோடி குறைந்து ரூ.5,93,512.25 கோடியாகவும், பாா்தி ஏா்டெல் ரூ.17,157.73 கோடி குறைந்து ரூ.2,68,222.48 கோடியாகவும், கோட்டக் பேங்கின் சந்தை மதிப்பு ரூ.9,608.05 கோடி குறைந்து ரூ.2,55,249.73 கோடியாகவும் இருந்தது. மேலும், ஐடிசி சந்தை மதிப்பு ரூ.3,383.80 கோடி குறைந்து ரூ.2,26,283.99 கோடியாகவும், ஐசிஐசிஐ பேங்க் ரூ.1,823.57 கோடி குறைந்து ரூ.2,55,249.73 கோடியாகவும், எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு ரூ.99.95 கோடி குறைந்து ரூ.3,17,221.68 கோடியாகவும் இருந்தது.

டாப்-10 பட்டியலில் ரிலையன்ஸ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 497.37 புள்ளிகள் (1.29 சதவீதம்)உயா்ந்து 38854.55-இல் நிலைபெற்றது.

தொகுப்பு: எம்எஸ்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com