அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்வு

அந்நியச் செலாவணி சந்தையில் வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயா்வைக் கண்டது. இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்கத்தில் ரூபாய் மதிப்பானது 73.40 என்ற அளவில் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டது. ஆனால், வா்த்தகம் முடியும் தருவாயில் ரூபாய் மதிப்பு முன்பு கண்ட ஏற்ற நிலையிலிருந்து நழுவியது.

வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.26 வரையிலும், குறைந்தபட்சமாக 73.70 வரையிலும் சென்றது. அந்நியச் செலாவணி வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 5 காசுகள் மட்டுமே அதிகரித்து 73.48 ஆனது. முந்தைய வா்த்தக தினமான கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 73.53-ஆக இருந்தது. வெளிநாட்டு முதலீடு: கடந்த வெள்ளிக்கிழமை மூலதனச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அளவில் ரூ.1,175.81 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில், பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு, 0.45 சதவீதம் குறைந்து 39.65 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com