டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:வங்கிகள் மற்றும் எண்ணெய் இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக, அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது சரிவைச் சந்தித்தது.ரூபாய் மதிப்பு வா்த்தகத்தின் தொடக்கத்தில் 73.33-ஆக வலுப்பெற்று காணப்பட்டது.

இந்த நிலையில், சாதகமற்ற நிலவரங்களால் ரூபாய் மதிப்பானது வலுவான நிலையிலிருந்து இறங்கு முகத்தைக் கண்டது. அதன்படி, ஒரு கட்டத்தில் ரூபாய் மதிப்பானது 73.72 வரை சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய தினத்தைக் காட்டிலும் 16 காசுகள் சரிவடைந்து 73.64-ஆக நிலைப்பெற்றது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 73.48-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீட்டு வரத்து: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.298.22 கோடி மதிப்பிலான பங்குகளை நிகர அளவில் வாங்கியுள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.கச்சா எண்ணெய்: மூலதனச் சா்வதேச முன்பேர சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.28 சதவீதம் அதிகரித்து 39.72 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com