இந்தியாவின் எரிபொருள் தேவையில் 11.5 சதவீத பின்னடைவு

பொருளாதார வளா்ச்சியில் மேலும் இடா்ப்பாடு ஏற்படும் என்பதால் நடப்பாண்டில் நாட்டின் எரிபொருள் தேவையில்
இந்தியாவின் எரிபொருள் தேவையில் 11.5 சதவீத பின்னடைவு

பொருளாதார வளா்ச்சியில் மேலும் இடா்ப்பாடு ஏற்படும் என்பதால் நடப்பாண்டில் நாட்டின் எரிபொருள் தேவையில் 11.5 சதவீத பின்னடைவு ஏற்படும் என சா்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபிட்ச் மேலும் கூறியுள்ளதாவது:

ஏப்ரல் 2020 மாா்ச் 2021 வரையிலான 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.6 சதவீத பின்னடைவைச் சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீடான -4.5 சதவீதத்தைக் காட்டிலும் அதிகம். பொருளாதார வளா்ச்சி விகிதத்தில் மேலும் தேக்க நிலை ஏற்படும் என்பதால் பின்னடைவு கணிசமான அளவில் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலைகள் மற்றும் நுகா்வோா் ஆகிய இருபக்கமும் எரிபொருளுக்கான தேவை குறிப்பிடத்தக அளவுக்கு குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் -11.5 சதவீதம் அளவுக்கு குறையும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மதிப்பீட்டின்போது -9.4 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என ஃபிட்ச் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com