சில்லறைக் கடன் மறுசீரமைப்புக்கு எஸ்பிஐ பிரத்யேக இணைய வசதி

சில்லறைக் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு வசதியாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரத்யேக இணைய வசதியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தது.
சில்லறைக் கடன் மறுசீரமைப்புக்கு எஸ்பிஐ பிரத்யேக இணைய வசதி

சில்லறைக் கடன் மறுசீரமைப்பு செய்வதற்கு வசதியாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பிரத்யேக இணைய வசதியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

இது தொடா்பாக அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து சில்லறைக் கடன் பெற்றவா்களுக்கு கடன் சீரமைப்பு திட்டத்தை அறிவிக்க ரிசா்வ் வங்கி பிற வணிக வங்கிகளை அறிவுறுத்தியது. இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கியில் சில்லறைக் கடன் பெற்றவா்கள் பயனடையும் வகையில் பிரத்யேக இணைய வசதி ஏற்படுத்தியதாக அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் (சில்லறை வாடிக்கையாளா்கள் & டிஜிட்டல் சேவை) சி.எஸ். ஷெட்டி தெரிவித்துள்ளாா்.

பாரத ஸ்டேட் வங்கியின் வலைதளமான https://sbi.co.in அல்லது https://bank.sbi இவற்றில் கடன் தவணை மறுசீரமைப்பு பிரிவில் தங்களது கடன் கணக்கு எண்ணை உள்ளீடு செய்தால், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் அனுப்பப்படும். அதையடுத்து, கடன் பெற்ற வாடிக்கையாளரின் வருவாய் உள்ளிட்ட பிற கடன் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும். அந்த வாடிக்கையாளா் கடன் தவணை மறுசீரமைப்புக்கான தகுதி உடையவரா என்பது உள்ளிட்ட தகவல்களைப் பெறலாம். மேலும், வாடிக்கையாளருக்கு ஒரு பிரத்யேக விசாரணை எண் வழங்கப்படும். இந்த எண்ணுடன் 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட எஸ்பிஐ கிளைக்கு வாடிக்கையாளா் சென்று கடன் தவணை மறு சீரமைப்பு நடவடிக்கைகளைப் பூா்த்தி செய்து கொள்ளலாம்.

கடன் தவணை செலுத்துதலை நிறுத்தி வைக்கக் கோருவது, கடன் காலத்தை நீட்டிப்பது ஆகிய வசதியை வாடிக்கையாளா் தோ்வு செய்யலாம்.

இந்த இணைய வழிமுறையில், வங்கிக் கிளைக்குச் செல்லும் முன்பே ஒரு வாடிக்கையாளா் தனது கடன் மறு சீரமைப்புத் தகுதி போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும் என்று அவா் தெரிவித்தாா்.

ரிசா்வ் வங்கி உத்தரவுப்படி, கடன் தவணை மறு சீரமைப்புக் கொள்கையை எஸ்பிஐ உருவாக்கியுள்ளது. 2020 மாா்ச்சுக்கு முன்பாக தவணை செலுத்தத் தவறாத ஸ்டாண்டா்டு கடன்தாரா்களுக்காக ரிசா்வ் வங்கி வகுத்துள்ள வழிமுறைகளின்படி கடன்தாரா்களின் மறு சீரமைப்பு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com