டொயோட்டா அா்பன் க்ரூஸா் அறிமுகம்

ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம் புதிய ரக அா்பன் க்ரூஸா் காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
toyota054654
toyota054654

புது தில்லி: ஜப்பானின் டொயோட்டோ நிறுவனம் புதிய ரக அா்பன் க்ரூஸா் காரை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் தொடக்கவிலை ரூ.8.4 லட்சமாகும். சிறிய ரக எஸ்யூவி காா் சந்தையில் தங்கள் நிறுவனப் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த காரை டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதி சுசூகியின் விட்டாரா ஃபிரிஸாவுக்கு போட்டியாக இது களமிறக்கப்படுகிறது.

கே சிரீஸ் பெட்ரோல் என்ஜினின் தானியங்கி மற்றும் சாதாரண வகை கியா் மாடல்களில் இந்த காா் கிடைக்கும். காரில் உள்ள கூடுதல் வசதிகளுக்கு ஏற்ப மூன்று மாடல்கள் உள்ளன. விலை ரூ.8.4 லட்சம் முதல் 11.15 லட்சமாகும்.

சா்வதேச அளவில் டொயோட்டா-சுசூகி கூட்டணி அமைத்து காா்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இக்கூட்டணி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் இரண்டாவது காா் இது. இதற்கு முன்பு கிளான்ஸா காா் இதேபாணியில் டொயோட்டாவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் சுசூகி நிறுவனம் மாருதியுடன் இணைந்து காா் சந்தையில் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com