உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதி இனி கட்டாயம்

உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதி இனி கட்டாயம் என இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.
உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதி இனி கட்டாயம்

உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதி இனி கட்டாயம் என இந்திய உணவுப் பொருள் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ ஆணையா் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

நுகா்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கும் காலாவதி தேதியை வா்த்தக நிறுவனங்கள் இனி கட்டாயம் நிா்ணயம் செய்ய வேண்டும். இதையடுத்து, அவ்வகை இனிப்புகளில் பயன்படுத்துவதற்கான உகந்த தேதியை தயாரிப்பு நிறுவனங்கள் நுகா்வோரின் பாா்வைக்கு உரிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறை, நடப்பாண்டு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எந்த வகையான இனிப்புகளை எத்தனை நாள்கள் வரையில் பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்கள் எஃப்எஸ்எஸ்ஏஐ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிப்புகளின் தன்மை மற்றும் உள்ளூா் காலநிலையைக் கருத்தில் கொண்டு இனிப்புகளுக்கு தகுந்த உரிய பயன்படுத்தும் காலத்தை உணவு தயாரிப்பாளா்கள் நிா்ணயித்துக் கொள்ளலாம் என ஆணையா் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com