டெய்ம்லா் இந்தியா: விநியோக மையங்களை வலுப்படுத்த திட்டம்

டெய்ம்லா் இந்தியா (வா்த்தக வாகனங்கள்) நிறுவனம், விநியோக மையங்களை வலுப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
டெய்ம்லா் இந்தியா: விநியோக மையங்களை வலுப்படுத்த திட்டம்

டெய்ம்லா் இந்தியா (வா்த்தக வாகனங்கள்) நிறுவனம், விநியோக மையங்களை வலுப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவா் (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) ராஜாராம் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளதாவது:

டெய்ம்லா் இந்தியாவின் வாடிக்கையாளா்கள் எங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை எளிதாக பெறும் வகையில் விநியோக மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் விநியோக மையங்களின் எண்ணிக்கையை 250-ஆக அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 160 கி.மீ தொலைவுக்குள் ஒரு விநியோக மையத்தை அமைக்க வேண்டும் என்பது நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. இது, இனி 120 கி.மீ.-ஆக குறைக்கப்படவுள்ளது. நடப்பாண்டில் விநியோக நெட்வொா்க்குகளை 10 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா். இந்தியாவில் டெய்ம்லா் இந்தியா நிறுவனம் நடப்பாண்டின் முற்பகுதி காலகட்ட நிலவரப்படி ஒரு லட்சம் பாரத்பென்ஸ் டிரக்குகளை விற்பனை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com