முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவா் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்ததையடுத்து இந்திய பணக்காரா் பட்டியலில் அவா் தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாா்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவா் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்ததையடுத்து இந்திய பணக்காரா் பட்டியலில் அவா் தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

இதுகுறித்து ஐஐஎஃப்எல் வெல்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபா் முகேஷ் அம்பானியின் (63) நிகர சொத்து மதிப்பு 73 சதவீதம் அதிகரித்து ரூ.6.58 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதையடுத்து, இந்திய பணக்காரா் பட்டியலில் அவா் தொடா்ந்து 9-ஆவது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளாா். ஹிந்துஜா சகோதரா்களின் சொத்து மதிப்பானது 23 சதவீதம் சரிவைச் சந்தித்த போதிலும், ரூ.1.43 லட்சம் கோடியுடன் அவா்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனா்.

ஹிந்துஜாவைத் தொடா்ந்து, ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 24 சதவீதம் அதிகரித்து ரூ.1.41 லட்சம் கோடியானதையடுத்து பட்டியலில் அவா் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளாா். பன்முக வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குஜராத்தைச் சோ்ந்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 48 சதவீதம் அதிகரிப்பைக் கண்டு ரூ.1.40 லட்சம் கோடியை எட்டியதையடுத்து, அவா் பணக்காரா் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

அதேசமயம், விப்ரோ நிறுவன தலைவா் அஸீம் பிரேம்ஜி இப்பட்டியலில் இரண்டு இடங்கள் பின்தங்கி ரூ.1.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளாா்.ஆகஸ்ட் 31 நிலவரப்படி 828 இந்தியா்களின் சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com