சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1% வரை குறைப்பு

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 1.1 சதவீதம் வரை குறைத்து புதன்கிழமை அறிவித்துள்ளது.
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 1.1% வரை குறைப்பு


புது தில்லி: சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 1.1 சதவீதம் வரை குறைத்து புதன்கிழமை அறிவித்துள்ளது. வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதையடுத்து சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.

2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான இந்த வட்டி விகிதம் ஏப். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடா்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்திருப்பது: பொது வருங்கால வைப்பு நிதிக்கான (பிபிஎஃப்) வட்டி விகிதம் 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.4 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான (என்எஸ்சி) வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 5.9 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது 4 சதவீதத்தில் 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 1.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5.5 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 5 சதவீதத்தில் 0.5 சதவீதமும், 3 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.4 சதவீதமும், 5 ஆண்டுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதமானது 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதமானது 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.9 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கிசான் விகாஸ் பத்திரத்துக்கான (கேவிபி) ஆண்டு வட்டி விகிதமானது 0.7 சதவீதம் குறைக்கப்பட்டு 6.2 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com