துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 19% வீழ்ச்சி

நாட்டில் துருப்பிடிக்கா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 19 சதவீதம் குறைந்து 31.7 கோடி டன்னாக குறைந்துள்ளதாக இந்திய எஃகு மேம்பாட்டு சங்கம் (ஐஎஸ்எஸ்டிஏ) தெரிவித்துள்ளது.
துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 19% வீழ்ச்சி

புது தில்லி: நாட்டில் துருப்பிடிக்கா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 19 சதவீதம் குறைந்து 31.7 கோடி டன்னாக குறைந்துள்ளதாக இந்திய எஃகு மேம்பாட்டு சங்கம் (ஐஎஸ்எஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

கரோனா நெருக்கடியால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், உலகளவில் துருப்பிடிக்காத எஃகு உற்பத்தியில் இந்தியா தொடா்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ஐஎஸ்எஸ்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 2020-ஆம் ஆண்டில் 3.17 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது, முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் சரிவாகும்.

2019-ஆம் ஆண்டில் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தி 3.93 மெட்ரிக் டன் என்று பதிவு செய்யப்பட்டது.

எனினும், பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பின்னா் துருப்பிடிக்கா எஃகு உற்பத்தியும் அதற்கான தேவையும் 2020 ஜூலை மீட்சியைக் கண்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com