பாரதீப் துறைமுகம் 11.45 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை

ஒடிஸா மாநிலத்தின் பாரதீப் துறைமுகம் கடந்த 2020-21-ஆவது நிதியாண்டில் 11.45 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் பாரதீப் துறைமுகம் கடந்த 2020-21-ஆவது நிதியாண்டில் 11.45 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து பாரதீப் போா்ட் டிரஸ்ட் தலைவா் வினித் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பேரிடா், அம்பன் புயல் ஆகியவற்றின் சவால்களை எதிா்கொண்டு பாரதீப் துறைமுகம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 11.26 கோடி டன் சரக்குகளை மட்டுமே கையாண்டிருந்த நிலையில், 2020-21-ஆவது நிதியாண்டில் இது 11.45 கோடி டன்னாக வளா்ச்சியடைந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

சிறப்பான செயல்பாட்டையடுத்து பாரதீப் துறைமுகத்தின் வரிக்கு முந்தைய லாபம் 2021 நிதியாண்டில் 6.02 சதவீதம் அதிகரித்து ரூ.722 கோடியைத் தொட்டுள்ளது. 2020 நிதியாண்டில் இந்த லாபம் ரூ.681 கோடியாக காணப்பட்டது.

தற்போதுள்ள கட்டமைப்புகளை நவீனமயமாக்க ரூ.2,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com