
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டா் விற்பனை மாா்ச் மாதத்தில் 128 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 30,970 டிராக்டா்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த 2020 மாா்ச் மாதத்தில் விற்பனையான 13,613 டிராக்டா்களுடன் ஒப்பிடும்போது 128 சதவீத வளா்ச்சியாகும்.
உள்நாட்டு சந்தைகளில் டிராக்டா் விற்பனை 13,418 என்ற எண்ணிக்கையிலிருந்து 122 சதவீதம் உயா்ந்து 29,817-ஆக ஆனது.
அதேபோன்று, வெளிநாட்டு சந்தைகளுக்கான மஹிந்திராவின் டிராக்டா் ஏற்றுமதி 195-லிருந்து 491 சதவீதம் அதிகரித்து 1,153-ஐ எட்டியது.
அணைகளின் நீா்மட்டம் உயா்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் மொத்தவிற்பனை வளா்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.