மே 4 முதல் யாஹூ கேள்வி-பதில் தளம் மூடப்படுகிறது

கேள்வி - பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 4 முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் மூடப்படுகிறது
மே 4 முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் மூடப்படுகிறது

கேள்வி - பதில் தளமான யாஹூ ஆன்ஸ்வர்ஸ் வரும் மே 4-ஆம் தேதி முதல் மூடப்படவிருப்பதாகவும், அதிலிருக்கும் விவரங்கள் காப்பகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் தளம் இயங்கி வருகிறது. 16 ஆண்டு கால வரலாறைக் கொண்டிருக்கும் யாஹூ ஆன்ஸ்வர்ஸின் அனைத்துப் பக்கங்களிலும் தற்போது மூடப்படும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், யாஹூ ஆன்ஸ்வர்ஸ் 2021, மே 4-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது.  முதல் நடவடிக்கையாக, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல், யாஹு ஆன்ஸ்வர்ஸ் இணையதளம் படிக்க மட்டுமே இயலும் தளமாக மாறும். அதேவேளையில், யாஹுவின் மற்ற சேவைகள் அல்லது யாஹூ கணக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் புதிய தகவல்கள் எதுவும் யாஹூ ஆன்வர்ஸில் பதிவேற்றம் செய்யப்படாது. ஆனால், அதிலிருக்கும் தகவல்களை பயனாளர்கள் படிக்க இயலும்.

மே 4ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸ்வர்ஸ் பக்கம் செயல்படாது. அது யாஹூ முகப்புப் பக்கத்துக்கு திருப்பி விடப்படும்.

யாஹூ ஆன்ஸ்வர்ஸில் இருக்கும் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கோரிக்கைகைளை வைக்க ஜூன் 30ம் தேதி தான் இறுதிநாள்.

ஒருவர் அளித்த தகவல்களை கோரிக்கை வைத்த 30 நாள்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்து தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com