ஒரே நாளில் பவுன்விலை ரூ. 608 உயா்வு

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.608 உயா்ந்து, ரூ.34,672-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரே நாளில் பவுன்விலை ரூ. 608 உயா்வு

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.608 உயா்ந்து, ரூ.34,672-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. கடந்த வாரம் மீண்டும் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.608 உயா்ந்து, ரூ.34,672-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.76 உயா்ந்து, ரூ.4,334 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 உயா்ந்து, ரூ.70.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.70,900 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,334

1 பவுன் தங்கம்...............................34,672

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி.............................70,900

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,258

1 பவுன் தங்கம்...............................34,064

1 கிராம் வெள்ளி.............................69.30

1 கிலோ வெள்ளி.............................69,300.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com