ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 6% அதிகரிப்பு

ஜேஎஸ்டபிள்யூ உருக்கு உற்பத்தி 6% அதிகரிப்பு


புது தில்லி: ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 6 சதவீதம் அதிகரித்து 41.9 லட்சம் டன்னை எட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 41.9 லட்சம் டன்னை எட்டியுள்ளது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் உற்பத்தி செய்த 39.7 லட்சம் டன் உருக்குடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகமாகும்.

கடந்த காலாண்டில் நிறுவனத்தின் சராசரி உற்பத்தி திறன் பயன்பாடு 93 சதவீதமாக மேம்பட்டுள்ளது. குறிப்பாக, மாா்ச் மாதத்தில் மட்டும் இந்த பயன்பாடு 96 சதவீதமாக காணப்பட்டது.

கடந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 1.51 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான 1.60 கோடி டன் உருக்குடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும் என ஜேஎஸ்டபிள்யூ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com