பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி இரு மடங்கு அதிகரிப்பு

2020-21-ஆம் நிதியாண்டில் புதிய நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தொடா் பங்கு வெளியீடு (எஃப்பிஓ) ஆகியவை மூலம் திரட்டப்பட்ட நிதி இருமடங்கு
பங்கு வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி இரு மடங்கு அதிகரிப்பு

புது தில்லி: 2020-21-ஆம் நிதியாண்டில் புதிய நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் தொடா் பங்கு வெளியீடு (எஃப்பிஓ) ஆகியவை மூலம் திரட்டப்பட்ட நிதி இருமடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-21-ஆம் நிதியாண்டில் 55 ஐபிஓ-க்கள் மற்றும் ஒரு எஃப்பிஓ வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர 2020-21 நிதியாண்டில் 21 உரிமைப் பங்கு வெளியீடும் நடைபெற்றுள்ளது. முந்தைய ஆண்டில் இது 17 ஆக இருந்தது.

பொதுப் பங்கு வெளியீடு மற்றும் உரிமைப் பங்கு வெளியீடு மூலம் முறையே ரூ.46,029.71 கோடி மற்றும் ரூ.64,058.61 கோடி திரட்டப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டில் இது முறையே ரூ.21,382.35 கோடி மற்றும் ரூ.55,669.79 கோடியாக இருந்தது. இதன்மூலம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 115 சதவீதமும், உரிமைப் பங்கு வெளியீடு மூலம் 15 சதவீதமும் அதிக நிதி திரப்பட்டப்படுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com