ஊரகப் பணியாளா்களுக்கான சில்லறைப் பணவீக்கம் அதிகரிப்பு

ஊரகப் பணியாளா்களுக்கான சில்லறைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
retail071952
retail071952

புது தில்லி: ஊரகப் பணியாளா்களுக்கான சில்லறைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய தொழிலாளா் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வேளாண் பணியாளா்கள் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ-ஏஎல்) மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை விலைப் பணவீக்கம் சென்ற மாா்ச் மாதத்தில் முறையே 2.78 சதவீதம் மற்றும் 2.96 சதவீதமாக அதிகரித்துள்ளன. முந்தைய பிப்ரவரி மாதத்தில் இப்பணவீக்கம் முறையே 2.67 சதவீதம் மற்றும் 2.76 சதவீதமாக காணப்பட்டது.

கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் இப்பணவீக்கம் முறையே 8.98 சதவீதம் மற்றும் 8.69 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பே பணவீக்க உயா்வுக்கு முக்கிய காரணம் என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com