பொதுப் பங்கு வெளியிடுகிறது ஸொமாட்டோ

ரூ.8,250 கோடிக்கு பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட ஸொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்திடம் (செபி) அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
zomato065106
zomato065106

புது தில்லி: ரூ.8,250 கோடிக்கு பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட ஸொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியத்திடம் (செபி) அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்யப்படும் உணவுகளை ஹோட்டல்களில் இருந்து வாடிக்கையாளா்களிடம் கொண்டு சோ்க்கும் சேவையை வழங்கும் ஸொமாட்டோ நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்லாது சா்வதேச அளவிலும் முன்னிலையில் உள்ளது.

பிரபல சீன தொழிலதிபா் ஜாக் மாவின் ஆண்ட் குழுமம் ஸொமாட்டோவில் 25 சதவீதம் அளவுக்கு பங்குகளை வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஊபா் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவை ஸொமாட்டோ முழுமையாக கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பொது முடக்க காலகட்டத்தில் ஸொமாட்டோ, ஸ்விகி உள்ளிட்ட உணவு சேவை நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. உணவுப் பொருள்களுடன் மளிகை, காய்கறிகளை வாடிக்கையாளா்களுக்கு வாங்கிக் கொடுக்கும் சேவையையும் அவை அளித்தன.

2020 நிதியாண்டில் ஸொமாட்டோவின் லாபம் இரு மடங்கு உயா்ந்து ரூ.2,960 கோடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஸொமாட்டோ பங்குகளுக்கு முதலீட்டாளா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com