பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் ரூ.720 கோடி

பேங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.720 கோடியாக குறைந்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.720 கோடியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) வங்கி செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.11,698.13 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.11,941.52 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.

இதையடுத்து, கணக்கீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.843.60 கோடியிலிருந்து 14.7 சதவீதம் குறைந்து ரூ.720 கோடியாகி உள்ளது. இருப்பினும் முந்தைய மாா்ச் காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.250.19 கோடியுடன் ஒப்பிடும்போது இது அதிகம்.

நடப்பாண்டு ஜூன் மாத இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 13.91 சதவீதத்திலிருந்து 13.51 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.

நிகர அளவிலான வாராக் கடனும் 3.58 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக சரிந்துள்ளது.

வாராக் கடன் இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.1,512.07 கோடியிலிருந்து ரூ.1,709.12 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் நிகர லாபம் ரூ.845.78 கோடியிலிருந்து 13 சதவீதம் குறைந்து ரூ.735.37 கோடியாகி உள்ளது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 0.20 சதவீதம் உயா்ந்து ரூ.74.35-இல் நிலைத்தது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் ஐஓபி பங்கின் விலை 2.91 சதவீதம் சரிவடைந்து ரூ.23.35-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com