இந்தியன் ஓவா்சீஸ் வங்கி லாபம் ரூ.327 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.327 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
iob074536
iob074536

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.327 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.5,155 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் வங்கி ஈட்டிய வருமானமான ரூ.5,234 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

வாராக் கடனுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து நடப்பு நிதியாண்டில் ஜூன் காலாண்டில் வங்கி ஈட்டிய நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.121 கோடியிலிருந்து 2 மடங்குக்கும் மேல் அதிகரித்து ரூ.327 கோடியை எட்டியது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி வருமானம் 5.6 சதவீதம் குறைந்து ரூ.4,063 கோடியாக இருந்தது. வட்டி சாரா வருவாய் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,092 கோடியானது. இதற்கு, இதர வருவாயில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றமே முக்கிய காரணம்.

2021 ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் 13.90 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக குறைந்தது. மதிப்பின் அடிப்படையில் இது ரூ.18,291 கோடியிலிருந்து குறைந்து ரூ.15,952 கோடியாகி உள்ளது.

நிகர அளவிலான வாராக் கடன் 5.10 சதவீதத்திலிருந்து (ரூ.6,081 கோடி) 3.15 சதவீதமாக (ரூ.3,998 கோடி) சரிந்துள்ளது.

வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு முதல் காலாண்டில் ரூ.969.52 கோடியிலிருந்து ரூ.868 கோடியாக குறைந்தது என ஐஓபி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com