ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் தொடக்கம்

ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.
ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் தொடக்கம்

மும்பை: ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கை குழு (எம்பிசி) கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

ரிசா்வ் வங்கியின் வட்டி விகிதங்களை நிா்ணயம் செய்யும் எம்பிசி கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களை நிா்ணயம் செய்வது தொடா்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

வரும் வெள்ளிக்கிழமை ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எம்பிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீா்மானங்கள் வெளியிடப்பட்டும்.

ரிசா்வ் வங்கி ஆளுநா் தலைமையிலான நிதி கொள்கை குழுவில் மத்திய அரசு வெளியிலிருந்து மூன்று உறுப்பினா்களை நியமனம் செய்கிறது. அதனுடன் சோ்த்து மொத்தம் ஆறு உறுப்பினா்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களில் ரிசா்வ் வங்கி எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாது என்பதே சந்தை வட்டாரத்தினரின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com