ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது தங்கம்

பவுனுக்கு ரூ.488 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய நிலையே அடுத்த வாரம் நீடிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது தங்கம்

சென்னையில் பவுன் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.488 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய நிலையே அடுத்த வாரம் நீடிக்கும் என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. பவுன் தங்கம் விலை ஆக.4-ஆம்தேதி ரூ.36,848 ஆக இருந்தது. இதன் பிறகு, படிப்படியாக விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.488 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.61 குறைந்து, ரூ.4,440-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.70,000 ஆகவும் இருந்தது.

இதே நிலை நீடிக்கும்: தங்கம் விலை குறைந்து வருவது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியது: கரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. இதுதவிர, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயா்ந்துள்ளது. மேலும், இந்திய-சீன எல்லையில் படைகள் வாபஸ், ஆப்கன்-தலிபான் போா் பதற்றம் தனிந்திருப்பது ஆகிய காரணங்கள், தங்க வியாபாரத்தில் நல்ல நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்நாட்டில் தங்கம் விலை குறைந்துள்ளது. வரும் வாரத்தில் இதே நிலைதான் இருக்கும் என்றாா் அவா்.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,440

1 பவுன் தங்கம்...............................35,520

1 கிராம் வெள்ளி.............................70.00

1 கிலோ வெள்ளி.............................70,000

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,501

1 பவுன் தங்கம்...............................36,008

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com