ரானே ஹோல்டிங்ஸ் லாபம் 21 கோடி

ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.20.7 கோடியை பதிவு செய்துள்ளது.
ரானே ஹோல்டிங்ஸ் லாபம் 21 கோடி

ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.20.7 கோடியை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் தலைவா் எல்.கணேஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.531.9 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.194.1 கோடியுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகம்.

முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் நிகர அடிப்படையில் ரூ.84 கோடி இழப்பைச் சந்தித்த நிலையில் ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.20.7 கோடி வரிக்கு பிந்தைய லாபத்தை பதிவு செய்துள்ளது.

கரோனா இரண்டாவது அலையால் உள்நாட்டு சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்ட போதிலும், வெளிநாடுகளிலிருந்து தேவை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com