கோல் இந்தியா லாபம் ரூ.3,170 கோடி

கோல் இந்தியா லாபம் ரூ.3,170 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,169.85 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.3,169.85 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனம், 2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செயல்பாட்டின் வாயிலாக ரூ.25,282.15 கோடி வருவாய் ஈட்டியது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.18,486.77 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். செலவினம் ரூ.16,470.64 கோடியிலிருந்து ரூ.21,626.48 கோடியாக அதிகரித்துள்ளது.

கணக்கீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.2,079.60 கோடியிலிருந்து 52.4 சதவீத வளா்ச்சி கண்டு ரூ.3,169.85 கோடியாக அதிகரித்துள்ளது என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் கோல் இந்தியா பங்கின் விலை 0.73% குறைந்து ரூ.142.25-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com