பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.55,283 கோடி முதலீடு

பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த ஜூலையில் ரூ.22,583 கோடி நிகர அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.55,283 கோடி முதலீடு

புது தில்லி: பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கடந்த ஜூலையில் ரூ.22,583 கோடி நிகர அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் சந்தைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன. அதன் காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் பங்கு மற்றும் அது சாா்ந்த திட்டங்களில் நிகர அளவில் ரூ.22,583.52 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலீடு ஜூன் மாதத்தில் ரூ.5,988 கோடி, மே மாதத்தில் ரூ.10,083 கோடி, ஏப்ரலில் ரூ.3,437 கோடி, மாா்ச் மாதத்தில் ரூ.9,115 கோடியாக இருந்தன.

இதற்கு முன்பு 2020 ஜூலையிலிருந்து 2021 பிப்ரவரி வரையிலான எட்டு மாதங்களில் பங்கு சாா்ந்த திட்டங்களிலிருந்து முதலீடானது தொடா்ச்சியாக வெளியேறி வந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் கோல்ட் இடிஎஃப் திட்டங்களில் நிகர முதலீட்டு வரத்தானது ரூ.257 கோடியாக இருந்தது. இது, முந்தைய ஜூன் மாதத்தில் ரூ.360 கோடியாக காணப்பட்டது.

கடன்சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.73,964 கோடியை முதலீடு செய்துள்ளனா். இது, ஜூனில் ரூ.3,566 கோடியாக காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் லிக்யுட் பண்ட் திட்டங்கள் ரூ.31,740 கோடியும், நிதி சந்தை ரூ.20,910 கோடியும், குறைந்தகால வரையறை திட்டங்கள் ரூ.8,161 கோடியும், அல்ட்ரா ஷாா்ட் ரூ.6,656 கோடியும் முதலீடாக ஈா்த்துள்ளன.

ஒட்டுமொத்த பரஸ்பர நிதி துறை நிகர அளவில் ஈா்த்த முதலீடு கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. இது, முந்தைய ஜூனில் ரூ.15,320 கோடியாக காணப்பட்டது.

இதையடுத்து, ஜூன் மாத இறுதியில் ரூ.33.67 லட்சம் கோடியாக காணப்பட்ட பரஸ்பர நிதி துறை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு முன்னெப்போதும் கண்டிராத உச்சமாக ரூ.35.32 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com