இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் 'ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் '

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்சி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுகிறார்கள் 
இந்தியாவில்  விற்பனைக்கு வரும் சாம்சங் 'ஃபோல்டபிள்  ஸ்மார்ட்போன்கள் '
இந்தியாவில் விற்பனைக்கு வரும் சாம்சங் 'ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் '

சாம்சங் நிறுவனம் அடுத்த மாதம்  தன்னுடைய புதிய வரவான மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட கேலக்ஸி இசட் போல்ட் 3 5-ஜி மற்றும் கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை  இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது.

7.6 இன்ச் அளவு தொடுதிரை அமைப்பு கொண்ட கேலக்ஸி இசட் போல்ட் 3 தற்போது உலகளவில் 1,999 டாலருக்கும் (இந்திய மதிப்பு ரூ.1,39,600) 6.9இன்ச்  அளவுகொண்ட கேலக்ஸி இசட் பிலிப் 3  யின் விலை 999 டாலருக்கும் (ரூ.69,930) விற்கப்படுகிறது. 

இந்திய பொருளாதார நிலைக்கு தகுந்தது போல சரியான விலையை பின்னர் அறிவிப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்திருக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்நிறுவனம் 90 லட்சம் மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததோடு ஒட்டுமொத்த சந்தையில் 88 சதவீத பங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறது என்று கவுன்ட்டர் பாயிண்ட் நிறுவனம் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.

கேலக்ஸி இசட் போல்ட் 3 5-ஜி   -  7.6 இன்ச் அளவுள்ள இன்பினிட்டி தொடுதிரை உடன் 12 ஜிபி உள்ளக நினைவகமும் , 512 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும்  12 எம்பி, 10 எம்பி மற்றும் 4 எம்பி கொண்ட மூன்று கேமரா அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது . பாட்டரி சேமிப்பின் அளவு 4400ஆம்ப் ஆகும்.

கேலக்ஸி இசட் பிலிப் 3 5-ஜி - இரண்டு விதமாக வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றில்  8 ஜிபி உள்ளக நினைவகமும் 256 ஜிபி கூடுதல் சேமிப்புத் திறனுடனும் மற்றொன்றில் 8 ஜிபி உள்ளக நினைவகமும் 128 ஜிபி கூடுதல் சேமிப்பு வசதியுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10 எம்பி பின் பக்கமாகவும் 4 எம்பி முன் பக்கமாகவும் இரண்டு கேமராக்களை  பொருத்தியிருக்கிறார்கள். பாட்டரி சேமிப்பின் அளவு 3,300 ஆம்ப் ஆகும்.

மேலும் சாம்சங் தரப்பிலிருந்து , " எடையில்லாமல் , கைக்கு அடக்கமான , மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் , புதிய தலைமுறை வரவுகளான கேலக்ஸி இசட் போல்ட் மற்றும் பிலிப் வகை ஸ்மார்ட்போன்கள் கணிசமான விலையில் நல்ல தரத்துடன் விற்பனை செய்து வருகிறோம். இரண்டு போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 11 ஓஸ் படி இயங்கும் . தற்போது இந்த மடிக்கும் வகை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனை செய்ய  இருக்கிறோம் ' என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com