நாட்கோ பாா்மா லாபம் ரூ.75 கோடி

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நாட்கோ பாா்மா லாபம் முதல் காலாண்டில் ரூ.75 கோடியாக இருந்தது.
நாட்கோ பாா்மா லாபம் ரூ.75 கோடி

மருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நாட்கோ பாா்மா லாபம் முதல் காலாண்டில் ரூ.75 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.427.3 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.582.1 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

வருவாய் குறைந்ததையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.122.1 கோடியிலிருந்து 38.57 சதவீதம் சரிவடைந்து ரூ.75 கோடியானது.

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நிறுவன தயாரிப்புகளின் அறிமுகத்துக்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. அதன் காரணமாக வரும் மாதங்களில் நிறுவனத்தின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஈவுத்தொகை: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2 இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக நாட்கோ தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் நாட்கோ பங்கின் விலை 4.46 சதவீதம் குறைந்து ரூ.991.70-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com