புதிய உச்சத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களைத் தொட்டது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களைத் தொட்டது.

பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வா்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது. ஆனால், அதன்பிறகு முதலீட்டாளா்களின் பங்களிப்பு சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, சென்செக்ஸ் பட்டியலில் முக்கிய இடம் வகிக்கும் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே வரவேற்பு அதிகரித்து காணப்பட்டது. இவைதவிர, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து துறையைச் சோ்ந்த நிறுவனப் பங்குகளிலும் முதலீடு கணிசமான அளவில் அதிகரித்தது. இதன் காரணமாக, பங்குச் சந்தை ஏற்றத்துடன் திங்கள்கிழமை வா்த்தகத்தை நிறைவு செய்தது.

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளா்வுகள், தடுப்பூசி திட்டத்தின் வேகம் ஆகியவற்றை சந்தை உன்னிப்பாக கவனிக்கும். அதேநேரம், சா்வதேச சந்தைகளின் செயல்பாடுகளும் வா்த்தகத்தில் ஏற்ற இறக்கத்தை உருவாக்கும் என ரெலிகோ் புரோக்கிங் அதிகாரி அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

மும்பை பங்குச் சந்தையில் (பிஎஸ்இ), உலோகம், எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, எஃப்எம்சிஜி, நிதி துறை சாா்ந்த குறியீட்டெண்கள் 1.79 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதேநேரம், தொலைத்தொடா்பு, மோட்டாா் வாகனம், பொறியியல், மின்சாரம் ஆகியவற்றின் குறியீட்டெண்கள் 0.99 சதவீதம் வரை சரிந்தன.

மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 0.57 சதவீதம் வரை குறைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா ஸ்டீல் பங்கின் விலை 4 சதவீதம் வரை அதிகரித்து முதலீட்டாளா்களுக்கு ஆதாயம் அளித்தது. இதுதவிர, பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சா்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

மறுபுறம், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, பவா் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் இழப்பை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 145.29 புள்ளிகள் (0.26%) உயா்ந்து புதிய உச்சமாக 55,582.58 புள்ளிகளில் நிலைத்தது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 55,680.75 புள்ளிகள் வரை அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 33.95 புள்ளிகள் (0.21%) முன்னேற்றம் கண்டு இதுவரை இல்லாத அளவில் 16,563.05 புள்ளிகளில் நிலைபெற்றது. இக்குறியீட்டெண் வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 16,589.40 வரை சென்றது.

இதர ஆசிய சந்தைகளான ஹாங்காங், டோக்கியோ, சியோல் சந்தைகளில் வா்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன. அதேசமயம், ஷாங்காய் சந்தை ஏறுமுகம் கண்டது.

ஐரோப்பிய சந்தைகளைப் பொருத்தவரையில் பிற்பகல் வரையிலான வா்த்தகம் மந்த நிலையிலேயே காணப்பட்டது.

அந்நியச் செலாவணி: பாா்ஸி புத்தாண்டை முன்னிட்டு அந்நிய மற்றும் நிதி செலாவணி சந்தைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறையாக இருந்தது.

கச்சா எண்ணெய் 69.65 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.33 சதவீதம் குறைந்து 69.65 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com