ஆகஸ்ட்-26 முதல் விற்பனைக்கு வரும் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல் 5ஏ 5ஜி' ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனம் விரைவில் தன்னுடைய புதிய ஆக்கமான பிக்சல் 5ஏ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது
ஆகஸ்ட்-26 முதல் விற்பனைக்கு வரும்  கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல் 5ஏ 5ஜி' ஸ்மார்ட்போன்
ஆகஸ்ட்-26 முதல் விற்பனைக்கு வரும் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல் 5ஏ 5ஜி' ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனம் விரைவில் தன்னுடைய புதிய ஆக்கமான பிக்சல் 5ஏ 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையை 449 டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.33,430)  நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

இதன் உற்பத்தி மேலாளரான பிரைன் ரகோவ்ஸ்கி ' முதல் முறையாக ஏ- தொடரில் பிக்சல் சாதனங்கள் வெளியாகிறது. ஐபி67 தொழில்நுட்பத்துடன்  தண்ணீரில் பட்டாலும் ஒன்றும் ஆகாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி சேவையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம் ' என தெரிவித்திருக்கிறார்.

பிக்சல் 5ஏ 5ஜியின் சிறப்பம்சங்கள் :

   * உள்ளக நினைவகம் 6ஜிபியும் கூடுதல் நினைவகம் 128 ஜிபியும் கொண்ட 6.34 இன்ச் அளவுள்ள ஓல்ஈடி திரை அமைப்புடன் ஸ்னாப்டிராகன் 765ஜி ப்ராசசர் அமைப்புடன் 5ஜி இணைய வசதியைக் கொண்டிருக்கிறது. .

  * துல்லியமான காட்சிகளைப் படம்பிடிக்கும் வகையில் அல்ட்ரா லென்ஸ்கள் கொண்ட இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதால் இரவிலும் புகைப்படத்தின் துல்லியம் மாறாமல் எடுக்கலாம்.

  * ஒருமுறை சார்ஜ் செய்தால் 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு பாட்டரி வசதி .

மேலும் நிறுவனத்தின் தரப்பில் ' பிக்சல் உபயோகிப்பாளர்கள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் அபாரமான விசுவல் மூலம் விளையாட்டுக்களை விரும்பி விளையாடலாம் . விற்பனைக்கு வரும்போதே  வாங்குபவர்களுக்கு மூன்று மாதம் இலவசமாக யூடியூப் ப்ரீமியம் சந்தாவும், கூகுள் பிளே பாஸ் மற்றும் கூகுள் ஒன் வழங்கப்படும் . மேலும் அமெரிக்க பகுதிகளில்  இருப்பவர்களுக்கு கூகுள் பை மூலம் இலவசமாக செய்திகளை அனுப்ப , பேசிக்கொள்ள கூகுள் நிறுவனம் அனுமதி அளிக்கும் ' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com