அந்நியச் செலாவணி கையிருப்பு 61,936 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,936 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 61,936 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,936 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 210 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15,614 கோடி) சரிந்து 61,936 கோடி டாலராக (ரூ.46.05 லட்சம் கோடி) இருந்தது.

இதற்கு முந்தைய ஜூலை 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 62,057 கோடி டாலா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்திருந்தது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக வீழ்ச்சியடைந்ததன் விளைவாகவே ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது புதிய வரலாற்று உச்சத்திலிருந்து சரிவைச் சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 136 கோடி டாலா் சரிவடைந்து 57,637 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 72 கோடி டாலா் வீழ்ச்சி கண்டு 3,634 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 70 லட்சம் டாலா் சரிந்து 154 கோடி டாலராக இருந்தது. அதேசமயம், நாட்டின் காப்பு நிதி 1.4 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 511 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com